டெல்லி: தமிழகம் உள்பட 5மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பது தொடர்பாக டெலலியில் உள்ள தேர்தல் ஆணையத்தில், தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில், தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை அறிவிப்பது தொடர்பாக விவாதித்து முடிவு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. தமிழ்நாடு சட்ட மன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 22ம் தேதியும்,  புதுச்சேரி மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஜூன் 4ம் தேதியும், கேரள மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 24ம் தேதியுடனும், அசாம் மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 23ம் தேதியும்,  மேற்கு வங்க சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 26ம் தேதியுடனும் நிறைவு பெறுகிறது. தேர்தல் தேதி அறிவிப்பது தொடர்பா தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர்  5 மாநிலங்களுக்கும் சென்று மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகளுடன்  ஆலோசனை நடத்தியதுடன்,  தேர்தல் பணிகளையும் முடுக்கி விட்டுள்ளது.

இந்த நிலையில், 5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக செவ்வாயன்று தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. தேர்தல் தேதி குறித்து முடிவு செய்வதற்காக இந்த ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.