ஆந்திர துணை முதல்வரின் வீட்டுக்கு நடிகை ரோஜா திடீரென சென்று அவர் குழந்தையை அள்ளி அணைத்து கொஞ்சிய வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
சமூக அக்கறை நிறைந்த புஷ்பா குருபாம் தொகுதியில் எண்ணற்ற சமூக பணிகளில் ஈடுபட்டவர். அதன்மூலம் தொகுதி மக்களின் நேரடியான பாராட்டைப் பெற்றார்.
குருபாம் சட்டப்பேரவை தொகுதியில் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று துணை முதல்வரும் ஆகி விட்டார். புஷ்பாவின் கணவர் சத்ருசர்லா பரிக்சித் ராஜு. வெகு நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்த இந்தத் தம்பதிக்கு கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் நடிகையும் ஆந்திர அரசியல்வாதியுமான ரோஜா, புஷ்பாவின் குழந்தையைப் பார்க்க நேராக அவர் வீட்டுக்கு சென்றுள்ளார். தொட்டிலில் இருந்த குழந்தைக்கு விபூதி பூசி விட்டு, தூக்கிக் கொஞ்சியுள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புஷ்பா ஸ்ரீவாணி, வீட்டுக்கு வந்த ரோஜாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.