‘பொன்னியின் செல்வன்’, ‘கோப்ரா’ ஆகிய படங்களை முடித்துவிட்டு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள ‘சீயான் 60’ படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் விக்ரம்.

‘கோப்ரா’ தயாரிப்பாளர் லலித் குமாரே இந்தப் படத்தையும் தயாரிக்கவுள்ளார்.

விக்ரமுடன் அவருடைய மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கவுள்ளார். இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமையவுள்ளது.

தற்போது இதில் நாயகியாக நடிக்க வாணி போஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.