கணவர் கன்யே வெஸ்ட் உடன் இனியும் இணைந்து வாழ முடியாது என்கிற முடிவுக்கு வந்த கிம் கர்தாஷியன், கணவருக்கு எதிராக விவாகரத்து வேண்டி வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு ராப் இசை பாடகரான மீக் மில்லுடன் இணைந்து சிறைகளை சீரமைக்கும் பணியை கிம் மேற்கொண்டார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பின் காரணமாக கன்யே வெஸ்ட் பல முறை கிம் கர்தாஷியனை விவாகரத்து செய்ய முயற்சி செய்துள்ளார். ஆனால், கர்தாஷியன் ஒவ்வொரு முறையும் அதை தவிர்த்து வந்த நிலையில், இனியும் கன்யேவுடன் இணைந்து வாழ முடியாது என்கிற முடிவுக்கு கர்தாஷியன் வந்துள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே விவாகரத்துக்கான பணிகளை கிம் கர்தாஷியன் தொடங்கியதாகவும், புகழ்பெற்ற செலிபிரிட்டி வழக்கறிஞரான லாரா வாஸரை கிம் கர்தாஷியன் விவாகரத்து வழக்குக்காக ஒப்பந்தம் செய்துள்ளார் என்றும் செய்திகள் வெளியாகின.

2012ம் ஆண்டு முதல் காதலித்து வந்த பந்தம் 7 ஆண்டுகள் திருமண உறவு முடிவுக்கு வந்துள்ளது.

மேலும், தனது 4 குழந்தைகளையும் இருவருமே பராமரிக்க வேண்டும் என்கிற முனைப்புடனே இந்த விவாகரத்து வழக்கை கிம் கர்தாஷியன் அணுக போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இருவரும் இணைந்து வாங்கிய பல கோடி ரூபாய் சொத்துக்களை சரி சமமாக பிரிக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.