ஹீரோவாக கோலிவுட்டுக்கு வந்த சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகர் ஆவார். அவர் நடிகர் மட்டும் அல்ல ஒரு தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், பாடகரும் கூட.
இந்நிலையில் மாநில அரசின் கலைமாமணி விருதைப் பெற்றுவிட்டு, அதை தன் தாயிடம் ஆசி பெற்று அதனை நெகிழ்ச்சியும் பெருமிதமும் பொங்கப் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், எங்களை கரைசேர்த்த தாய்க்கு இந்த கலைமாமணி விருது சமர்ப்பணம் என ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். மேலும், தாயின் காலில் விழுந்து வணங்கிய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும்,இந்த விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற எங்களை இழுத்து பிடித்து கரைசேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம் எனப் பதிவிட்டுள்ளார்.
சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும்,இந்த விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி🙏 தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற எங்களை இழுத்து பிடித்து கரைசேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம்🙏 pic.twitter.com/EtBPVyycNK
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 20, 2021