விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது கமல் நடிக்கவுள்ள ‘விக்ரம்’ படத்தை இயக்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் விஜய் படத்தை இயக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தை இயக்கி வருபவர் ஹெச்.வினோத். திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரிடமும் ரசிகர்கள் “வலிமை அப்டேட்” எனக் கேட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் ஹெச்.வினோத் – லோகேஷ் கனகராஜ் இருவரும் சந்தித்துப் பேசியதுதான் இன்றைய சமூக வலைதள ஹாட் டாக்.
“பல ஆண்டுகள் கழித்து வினோத் அண்ணாவுடன் செலவழித்த நேரம் நன்றாக அமைந்தது” என்று தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
இந்தப் புகைப்படம் சமூக வலைதளத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
Good time spent with #Vinoth anna after years! #Brotherhood🤗 pic.twitter.com/ovcKugV0Hu
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) February 17, 2021