மலையாளத்தில் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற திரைப்படம் சின்ன பட்ஜெட்டில் தயாராகி ஓ.டி.டி.யில் வெளியானது, நல்ல விமர்சனம் கிடைத்தது.
சூரஜ் வெஞ்சரமோட் – நிமிஷா சாஜெயம் கணவன் – மனைவியாக நடித்திருந்தனர்.
ஜியோ பேபி இயக்கி இருந்தார்.
நடுத்தர குடும்பத்து பெண், சமையல் அறையில் படும் அவஸ்தைகளை இந்த படம், உணர்ச்சி பூர்வமாக கூறி இருந்தது.
இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இயக்க உள்ளார், கண்ணன்.
காரைக்குடியில் அடுத்த மாதம் ஷுட்டிங் வைத்துள்ளார்.
இரு மொழிப்படம் என்பதால், தென் மாநில ரசிகர்களுக்கு அறிமுகமான நட்சத்திரங்களை நடிக்க வைக்க உள்ளார்.
பி.ஜி. முத்தையா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
– பா. பாரதி