‘மகாநடி’ படம் மூலம் சினிமா மூலம் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்த இயக்குநர் நாக் அஷ்வின், முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார்.
நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை சொன்ன அந்த படம், அதில் கதாநாயகியாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதை வாங்கி கொடுத்தது.
இப்போது நாக் அஷ்வின், மிகப்பெரிய பட்ஜெட்டில் புதிய படம் இயக்கும் வேலைகளில் மூழ்கி உள்ளார்.
அமிதாப்பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோனே ஆகிய மூவரும் இந்த படத்துக்காக, முதல் கட்டமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இன்னும் திரளான நட்சத்திர பட்டாளம் இருக்கும் இது, ஷங்கரின் எந்திரன் போன்று விஞ்ஞான கதை அம்சம் கொண்ட படம்.
இதனால் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருக்கும்.
பல மொழிகளில் உருவாகும் இந்த படத்தை மகாநடி படத்தை தயாரித்த விஜயாந்தி மூவீஸ் தயாரிக்கிறது.
“முந்தைய சாதனைகள் அனைத்தையும் இந்த படம் முறியடிக்கும்” என்கிறார், நாக் அஷ்வின்.
– பா. பாரதி