கொரோனா சிகிச்சை தொடர்பான மருத்துவமனை செலவினங்கள், சரியான நேரத்தில் கிடைக்குமா? மற்றும் முழுமையாக கிடைக்குமா? என்ற கவலை பொது பாலிசிதாரர்களுக்கு இருந்த நிலையில், அவர்களின் கவலை நீங்கியுள்ளது.

இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்(ஐஆர்டிஏஐ) அறிவுறுத்தலின்படி, கொரோனா சிகிச்சைக்கான காப்பீட்டு தொகை, காலம் தாழ்த்தப்படாமல், உடனடியாகவும், முழுமையாகவும் கிடைக்கின்றன. அதாவது, பல மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கான முறையான கட்டண விகிதத்தைப் பின்பற்றவில்லை என்றாலும்கூட.

டெல்லியைச் சேர்ந்த மென்பொருள் வல்லுநர் மகேஷ் பனிக்ராஹி, கொரோனா சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். அவர் மொத்தம் 1 வாரம் மருத்துவமனையில் இருந்தார். அவருக்கான மருத்துவமனை கட்டணத் தொகையாக ரூ.3.9 லட்சம் வந்தது. அந்தக் கட்டணம் முழுவதும் காப்பீட்டு நிறுவனத்தால் செலுத்தப்பட்டது.

பலருக்கு, தங்களுக்கான மருத்துவமனை கட்டணம் முழுமையாக வருமா? என்ற கவலையும் இருந்தது. ஆனால், ஐஆர்டிஏஐ அறிவுறுத்தலின்படி, தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும் கட்டணம், ஒரு ஒழுங்குமுறையுடன் இல்லையென்றாலும்கூட, முழு தொகையும்  கிடைத்துவிடுகிறது என்பதே நடைமுறையாக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.