
லாகூர்: தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டி-20 தொடரையும் பாகிஸ்தான் வென்றுள்ளது. 3வது போட்டியில், 4 விக்கெட்டுகளில் வென்றதன் மூலம் தொடரைக் கைப்பற்றியுள்ளது பாகிஸ்தான்.
மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில், தலா 1-1 என்ற கணக்கில், இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. எனவே, கோப்பையை வெல்வதற்கான மூன்றாவது போட்டி லாகூரில் தொடங்கியது.
முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை எடுத்தது. பின்னர், சற்று எளிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு, துவக்க வீரர் முகமது ரிஸ்வான் 42 ரன்களை அடித்து நல்ல துவக்கம் கொடுத்தார்.
பாபர் ஆஸம் 30 பந்துகளில் 44 ரன்களை அடித்தார். ஆனாலும், பந்துகளைவிட ரன்களின் தேவை அதிகமாக இருந்தது. இந்நிலையில், 7வது மற்றும் 8வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த முகமது நவாஸ் மற்றும் ஹசன் அலி இருவரும் அதிரடியாக ஆடி, 18.4 ஓவர்களிலேயே அணியை வெற்றிபெற செய்தனர்.
ஹசன் அலி 7 பந்துகளில், 2 சிக்ஸர்கள் & 1 பவுண்டரியுடன் 20 ரன்களை அடித்தார். பாகிஸ்தான் 6 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை எடுத்து வென்று, தொடரையும் கைப்பற்றியது.
ஏற்கனவே டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]