பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாம் சீசன் மூலம் உலகளவில் பிரபலமானார் சாக்ஷி.
படவாய்ப்புகள் ஒரு பக்கம் வந்துகொண்டிருக்க, சோஷியல் மீடியாவில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
இந்த ஆண்டு சாக்ஷிக்கு சிறந்த ஆண்டு என்றே கூறலாம். ஹாலிவுட்டிலும் நந்தா இயக்கிய 120 hours திரைப்படத்தின் ,ஓலம் அடியெடுத்து வைத்துள்ளார்.
இந்நிலையில் நடிகை சாக்ஷி, காதலர் தினத்தையொட்டி, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி தன் அன்பை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: காதல் எப்படி வேண்டுமானாலும் வரலாம். அதற்கு எல்லைகளோ, விதிகளோ இல்லை. என்னைப் பொருத்தவரை காதலர் தினம் என்பது அன்பை வெளிப்படுத்துவது தான். இந்தாண்டு நான் காதலர் தினத்தை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடினேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என அவர் கூறினார்.
Valentine’s Day for me is a season to spread love to all souls around us .
I spent my Valentine’s day with these beautiful, super talented orphanage kids .
What more do I need than their happiness ?
This love from them is more than anything else in the world ❤️#ValentinesDay pic.twitter.com/F1Qn21bOwi— Sakshi Agarwal (@ssakshiagarwal) February 14, 2021