கொழுஞ்சி செடி. (Tephrosia Purpurea)

வறண்ட நிலங்களில் வளரும் வளமிகு செடி நீ!

பட்டாணி செடி உன் தம்பிச் செடி!

இலங்கை, இந்தியா நாடுகளில் அதிகமாகக் காணப்படும் அழகு செடி நீ!

நவதானிய செடிகளின் இடையில் வளரும் இனிய செடி நீ !

சூட்டு வலி ,பேதி ,தோல் வியாதி ,அஜீரணம், வயிற்றுப் பூச்சி ,வயிற்று வலி ,வயிற்றுப்போக்கு, சுவாச நோய்கள், சளி,  ஆஸ்துமா, வீக்கம், குடல் புண் ,சிறுநீர்க்கடுப்பு, இதய நலம், வாய்ப்புண், பூச்சிப்பல் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ !

உடல் எதிர்ப்புசக்தியைக்  கொடுக்கும் உன்னத செடி நீ !

வயலில் வளர்ந்து வயலில் மடியும் இயற்கை உரமே! நஞ்சை நிலத்தின் தழை உரமே!

ஆறு ஆண்டுக் காலம் மண் வளம் காக்கும் அரிய உரமே!

உழவர்களின் இயற்கை வரமே!

நீவிர் பல்லாண்டு வாழ்க!வளர்க1 உயர்க!

நன்றி :  பேரா.முனைவர். ச.தியாகராஜன்

நெய்வேலி.

📱9443405050.