சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் சதத்தை இன்று பதிவுசெய்தார் ரோகித் ஷர்மா. அவர் 161 ரன்களை அடித்து அவுட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா முடக்கத்திற்கு பிறகு, அவர் அடிக்கும் முதல் சதம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று, விராத் கோலி, ஷப்மன் கில் மற்றும் புஜாரா ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்த நிலையில், துணைக்கேப்டன் ரஹானேவுடன் சேர்ந்து பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தார் ரோகித் ஷர்மா.
தற்போது 33 வயதாகும் ரோகித் ஷர்மா, மொத்தம் 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 2000 ரன்களுக்கு மேலாக அடித்துள்ளார். அதாவது, 44 சராசரி வைத்துள்ளார்.