ஒரு படம் வெற்றி பெற்று வசூல் குவித்து விட்டால், அதன் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் எடுப்பது எல்லா மொழிகளிலும் வழக்கம்.

இந்தி சினிமா உலகில் இந்த மோகம் கூடுதலாக உண்டு.

தூம் என்ற படத்தில் அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடித்திருந்தார்.
நல்ல வெற்றி.

வசூலும் கொட்டியது.

இதன் தொடர்ச்சியாக தூம்- 2 ஹிருத்திக் ரோஷன் நடிப்பிலும், தூம் -3 அமீர்கான் நடிப்பிலும் வெளியானது.

இப்போது ‘தூம் -4’ தயாராக உள்ளது.

இந்த நான்காவது பாகத்தில் ஒரு சிறப்பு உள்ளது.

வில்லன், ஆண் அல்ல.

பெண்.

அந்த வில்லன் கேரக்டரில் தீபிகா படுகோனே நடிக்க உள்ளார்.

ஸ்கிரிப்ட் பிடித்துள்ளதால், வில்லன் வேடத்தில் நடிக்க ஒப்புகொண்டுள்ளார், தீபிகா.

கதாநாயகன் மற்ற நடிகர்கள் இன்னும் முடிவாகவில்லை.

– பா. பாரதி