மே.வங்காள மாநிலத்தில் இன்னும் இரு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
கடந்த சில மாதங்களாக ஆளும் திரினாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் சாரை சாரையாக விலகி பாரதிய ஜனதாவில் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.
நாடாளுமன்ற மேல்சபை திரினாமூல் காங்கிரஸ் உறுப்பினர் தினேஷ் திரிவேதி என்பவர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மேல்சபை கூட்டம் நடந்த போது இதனை பகிரங்கமாக அறிவித்த அவர், தனது பதவி விலகல் கடிதத்தை அவைத்தலைவரும், குடியரசு துணை தலைவருமான வெங்கையா நாயுடுவிடம் அளித்தார்.
பா.ஜ.க.வில் அவர் தன்னை ஐக்கிய படுத்திக்கொள்வது உறுதியாகி விட்டது.
“மம்தா பானர்ஜி, அஜீத் பாஞ்சா, நான் எல்லோரும் சேர்ந்து தான் திரினாமூல் காங்கிரசை ஆரம்பித்தோம். அப்போது டெல்லி செல்ல 5 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாயை புரட்டுவதற்க்கு போராட வேண்டும், இப்போது கட்சிக்கு ஆலோசனை சொல்ல ஒருவரை நியமித்துள்ளனர். அவருக்கு பல கோடி ரூபாய் சம்பளம்” என புலம்புகிறார், தினேஷ் திரிவேதி.
– பா. பாரதி