70 வயதாகி விட்டால், பா.ஜ.க.வில் எம்.பி. எம்.எல்.ஏ. பதவியை வகிக்க முடியாது.

அதுபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பது இல்லை என முடிவு செய்துள்ளது.

இந்த கொள்கையின் படி கேரளாவில் இப்போது எம்.எல்.ஏ.க்.களாக உள்ள 7 பேருக்கு மீண்டும் சீட் கிடைக்காது.

கானம் ராஜேந்திரன்

அந்த மாநிலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் நான்கு அமைச்சர்கள் உள்ளனர்.

அவர்களில் மூன்று பேருக்கு சீட் கொடுப்பதில்லை என கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் கானம் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

“மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்களுக்கு டிக்கெட் கிடையாது என்பதில் சமரசம் இல்லை. இதனால் புதியவர்கள் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

– பா. பாரதி