மியான்மர்:
தெற்காசிய நாடு முழுவதும் ராணுவ சதி திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்ததால், தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க மியான்மரின் ராணுவத்தால் நடத்தப்படும் உள்ளடக்கம் மற்றும் சுய விவரங்களுக்கு ஃபேஸ்புக் கட்டுப்பாடு விதித்துள்ளது.
பிப்ரவரி 1 ஆம் தேதி இராணுவ சதி திட்டத்தை தொடர்ந்து நாட்டின் நிலைமை நிலையற்றதாக இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 7ஆ ம் தேதி ஆட்சிமாற்றம் வரை ஃபேஸ்புக் தற்காலிகமாக மியான்மரில் தடை செய்யப்பட்டிருந்தது, ஆனால் அதன்பிறகும் ராணுவத்தை பற்றிய தவறான தகவல்கள் பகிரப்பட்டு வருவதால் , மியான்மரில் பேஸ்புக் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, பேஸ்புக் மட்டுமல்லாமல் புகைப்படத்தை பகிரும் செயலியான இன்ஸ்டாகிராம் மற்றும் மைக்ரோ பிளாகிங் செயலியான ட்விட்டருக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.