
டாக்கா: வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 409 ரன்கள் குவித்தது விண்டீஸ் அணி. தற்போது, தனது முதல் இன்னிங்ஸை ஆடிவரும் வங்கதேசம், 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 105 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
டாஸ் வென்ற விண்டீஸ் அணி, முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. விண்டீஸ் அணியில் யாரும் சதமடிக்கவில்லை என்றாலும், மொத்தம் 3 வீரர்கள் பெரிய அரைசதங்களை அடித்தனர். நிக்ருமா பானர் 90 ரன்களையும், ஜோஷ்வா டா சில்வா 92 ரன்களையும், அல்ஸாரி ஜோசப் 82 ரன்களையும் அடித்தனர். துவக்க வீரர் பிராத்வெய்ட் 47 ரன்களை அடித்தார்.
இதனால், அந்த அணி 142 ஓவர்கள் ஆடி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 409 ரன்களைக் குவித்தது.
தற்போது, தனது முதல் இன்னிங்ஸை ஆடிவரும் வங்கதேசம், 105 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. தற்போது 2ம் நாள் ஆட்டம் முடிவடைந்துள்ளது.
[youtube-feed feed=1]