பிக் பாஸ் தமிழ் சீசன் 4-ன் காதல் மன்னனாக பாலாஜி முருகதாஸ் மட்டுமே வலம் வந்தார்.
பிக் பாஸ் வீட்டில் ஷிவானி நாராயணன் உடன் நெருங்கி பழகி வந்த பாலாஜி முருகதாஸ், தங்களுக்குள் இருந்தது அன்பு மட்டும் தான் காதல் இல்லை என்பதை விளக்கி இருந்தார்.
பாலாவின் கையில் இருக்கும் டாட்டூவில் இருக்கும் அந்த பெயரை காட்ட சொல்லி அர்ச்சனா கால் சென்டர் டாஸ்க்கிலேயே பாலாவின் பாஸ்ட் லவ்வை பற்றி ஓப்பன் பண்ணி விட்டதும் நிகழ்ச்சியில் பரபரப்பை கிளப்பியது.
இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் பாலாஜி முருகதாஸ், வரும் பிப்ரவரி 14ம் தேதி எல்லாருக்கும் காதலர் தினம், ஆனால், நமக்கு மட்டும் முரட்டு சிங்கிள் டே என போட்டுள்ள ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.