சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் வசிப்பது அனைவரும் அறிந்த விஷயம் தான்.

இந்நிலையில் மாமனார் இருக்கும் பகுதியிலேயே வசிக்க முடிவு செய்து போயஸ் கார்டனில் நிலம் வாங்கியிருக்கிறார் நடிகர் தனுஷ்.

புது வீடு கட்ட இன்று காலை பூமி பூஜை நடந்தது. அந்த பூஜையில் ரஜினிகாந்த் தன் மனைவி லதா ரஜினிகாந்துடன் கலந்து கொண்டார்.

பூமி பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.