டெல்லி: கட்டுமான தொழிலாளர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் வேலை வழங்கும் வகையில் புதிய குறியீடுகளை நிர்ணயிக்க இஎஸ்ஐசி (ESIC – தொழிலாளர் காப்புறுதி திட்டம்) முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொழிலாளர் காப்புறுதி திட்டத்தின்கீழ் முறைசாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான பாதையில் பெரிய சீர்திருத்தங்களை செய்ய முன்வந்துள்ளதாக, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு செயலாளர் அபூர்வா சந்திரா தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் துறை முக்கியமான மாற்றங்களுக்காக அமைக்கப்பட்டு இருப்பதாகவும், விரைவில் செயல்படுத்தப்படவுள்ள நான்கு புதிய தொழிலாளர் குறியீடுகள், சில முதலாளிகளுக்கு வேலை நாட்களின் எண்ணிக்கையை வாரத்திற்கு நான்காகக் குறைக்கும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், வேலை நேரத்தின் அளவு வாரத்திற்கு 4 நாள் என்றும், அதாவது 48 மணி நேரமாக அமைக்கப்பட்டிருப்பதால் (நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம்), வாரத்தின் மற்ற 3 நாட்கள், அவர்கள் நிறுவனத்தின் முதலாளி ஓய்வூதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அடுத்த சில வாரங்களில் நான்கு புதிய தொழிலாளர் குறியீடுகளை செயல்படுத்த தொழிலாளர் அமைச்சகம் பொருத்தமான விதிமுறைகளையும் விதிகளையும் வகுத்து வருகிறது.
புதிக குறியீடுகளின்படி, தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிபந்தனைகள் குறியீடு, 2020 இன் வரைவு விதிகளின் கீழ், வாராந்திர வேலை நேர வரம்பு 48 மணி நேரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த குறியீடு அனைத்து நிறுவனங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும்.
முதலாளிகள் மீதான சுமையை குறைக்க, ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC) தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த குறியீட்டின் பெரும்பாலான விதிகள் இறுதி செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய ESIC திட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 9.33 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், பஞ்சாப், உத்தரபிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவை இந்த வாரம் தொழிலாளர் குறியீடுகளில் தங்கள் வரைவு விதிகளுடன் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கான பதிவு மற்றும் பிற வசதிகளுக்காக மே அல்லது ஜூன் மாதங்களுக்குள் இந்த போர்டல் வெளியிடப்பட இருப்பதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், அந்த குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவுசெய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு பிரதான் மந்திரி சூரக்ஷா பீமா யோஜனா (பி.எம்.எஸ்.பி.ஒய்) இன் கீழ் தற்செயலான விபத்து மற்றும் ஊனம் ஏற்பட்டால், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், இது ஒரு வருடத்திற்கு இலவசமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் பணியாளர் காப்பீட்டுத் திட்டத்தின் கணக்கில் ஒரு ஊழியரிடமிருந்து கழிக்கப்படும் பங்களிப்பை செலுத்துவதற்கு முதலாளியால் கழிக்கப்படும் தொகையின் பாதுகாப்பை புதிய குறியீடுகள் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.