சென்னை: ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் மக்களை சந்தித்து வரும் திமுக. தலைவர் மு.க.ஸ்டாலின் 2 கட்ட பணத்தை முடித்துள்ள நிலையில்ம் 3 ஆம் கட்ட சுற்றுப்பயணத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வரும் 12ந்தேதி 3வது கட்ட சுற்றுப்பயணத்தை கடலூர் மாவட்டத்தில் தொடங்குகிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 4 சில மாதங்களில் நடைபெறவுள்ளது. அதன்காரணமாக, திமுக தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ள. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொகுதிதொகுதியாக சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறது. ஏற்கனவே மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தி மக்களை சந்திதத ஸ்டாலின், பின்னர் உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில், தொகுதி வாரியாக சென்று மக்களை சந்தித்து வருகிறார்.
இதுவரை 2 கட்டமாக திருவண்ணாமலை, ராமநாதபுரம், தூத்துக்குடி , கன்னியாகுமரி,தென்காசி, சிவகங்கை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையை நடத்தி முடித்துள்ளார். அதையடுத்து 3வது கட்ட பயணமாக வரும் 12 ந்தேதி முதல் 15ந்தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என திமுக தலைமை அறிவித்து உள்ளது.
அதன்படி 12,13ந்தேதிகள் கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
14ந்தேதி காலை நாகை வடக்கு, தஞ்சை வடக்கு மாவட்டத்திலும், மதியம், திருவாரூர், நாகை தெற்கு மாவட்டத்திலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
15ந்தேதி அன்று காலை புதுக்கோட்டை வடக்கு, தெற்கு பகுதிகளிலும், மதியம் அரியலூர், பெரம்பலூரில் பிரசாரம் மேற்கொள்கிறார்.