‘கே.ஜி.எஃப்-2’ படத்தை முடித்துள்ள பிரஷாந்த் நெய்ல், அடுத்து பிரபாஸ் ஆக்‌ஷன் ஹீரோவாக நடிக்கும் ‘சாலர்’ என்ற பிரமாண்ட படத்தை டைரக்டு செய்து வருகிறார்.

இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.

சிங்கனேரி நிலக்கரி சுரங்கத்தில் இதன் ஷுட்டிங் இப்போது நடந்து வருகிறது.

இந்த படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆட பிரியங்கா சோப்ராவுக்கு அழைப்பு விடுத்துள்ளார், இயக்குநர் பிரஷாந்த்.

இந்தி படங்களில் நடித்து வந்த பிரியங்கா, சில ஆண்டுகளுக்கு முன், ஆங்கில பாடகர் நிக் ஜோன்சை திருமணம் செய்து கொண்டார். இப்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

‘சாலர்’ படத்துக்கு நடனம் ஆட, அவர் பெரும் தொகை கேட்பதாக தெரிகிறது.

இந்த பணத்தை கொடுக்க தயாரிப்பாளர்கள், தயாராக உள்ளனர்.

பிரியங்கா சோப்ரா ஏற்கனவே, ராவணன், அக்னிபாத் ஆகிய படங்களில் ‘ஐட்டம் டான்ஸ்’ ஆடியுள்ளார்.

– பா. பாரதி