டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,08,47,790 ஆக உயர்ந்து 1,55,195 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 8,689 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,08,47,790 ஆகி உள்ளது.  நேற்று 77 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,55,195 ஆகி உள்ளது.  நேற்று 13,575 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,05,46,905 ஆகி உள்ளது.  தற்போது 1,41,118 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 2,216 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,46,287 ஆகி உள்ளது  நேற்று 15 பேர் உயிர் இழந்து மொத்தம் 51,325 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,423 பேர் குணமடைந்து மொத்தம் 19,58,971 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 37,720 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 3,742 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,72,181 ஆகி உள்ளது.  இதில் நேற்று 16 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,884 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,959 பேர் குணமடைந்து மொத்தம் 9,02,627 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 65,413 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 328 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,42,846 ஆகி உள்ளது  இதில் நேற்று 3 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,239 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 350 பேர் குணமடைந்து மொத்தம் 9,24,654 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,934 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 62 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,88,485 ஆகி உள்ளது.  நேற்று ஒருவர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,160 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 102 பேர் குணமடைந்து மொத்தம் 8,80,363 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 962 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 464 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,42,261 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,387 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 495 பேர் குணமடைந்து மொத்தம் 8,25,520 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,354 பேர் சிகிச்சையில் உள்ளனர்.