கொரோனா வைரஸ் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரஸால் பாதிப்படைந்துள்ளனர்.
நடிகர்கள் சரத்குமார், அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், விஷால், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், தமன்னா, ஜெனிலியா, நிக்கி கல்ராணி, ராஜமவுலி, பிருத்விராஜ், டாக்டர் ராஜசேகர், ஜீவிதா, ராம் சரண் தேஜா உட்பட பலர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நடிகர் சூர்யா கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
இதுதொடர்பாக நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும் என்று தெரிவித்துள்ளார்.
’கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்.
— Suriya Sivakumar (@Suriya_offl) February 7, 2021