விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை கிரண்.

ஒரு காலத்தில் இளசுகளின் கனவு கன்னியாக இருந்த கிரண், தற்போது எடை கூடிய லுக்கில் உள்ளார். இதனால், அத்தை, அம்மா, அண்ணி, அக்கா கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தான் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்த போது எடுத்த பேட்டோவை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் கிரண்.

ஆரம்ப காலத்தில் உடல் எடையைக் குறைக்க மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால் 20 கிலோவை 2 மாதத்தில் குறைத்தேன். இப்போது 2 கிலோவை குறைக்க 2 மாதங்கள் ஆகிறது. நம்மை நாம் நம்பும் போது அழகாக தெரிவோம். கண்மூடித்தனமாக மற்றவர்கள் சொல்வதை கேட்காதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CK8SdlCp-T6/