2010- ம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று எனும் திரைப்படம் விஜய்சேதுபதியை நாயகனாக அறிமுகப்படுத்தியது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சுந்தர பாண்டியன், சூது கவ்வும், நானும் ரவுடிதான், சேதுபதி, விக்ரம் வேதா-னு தொட்டதெல்லாம் பொன்னாகியது .

தமிழ் திரையுலகின் மூத்த திரையுலக பின்னணி கலைஞர்களை கௌரவப்படுத்தும் வகையில் கடந்த 2017-ம் ஆண்டு மே 1 ஆம் தேதி அன்று பிரம்மாண்ட விழா ஒன்று நடந்தது. உலகாயுதா நிறுவனத்தின் சார்பில் அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இயக்குனர் எஸ் பி ஜனநாதனின் தலைமையில் இந்த விழாவில் தமிழ் திரையுலகின் 100 மூத்த கலைஞர்களுக்கு தலா ஒரு சவரன் என மொத்தம் நூறு சவரன் தங்க பதக்கங்கங்களின் செலவை முழுவதுமாக ஏற்றிருந்தார் விஜய் சேதபதி.

விஜய் சேதுபதியின் இப்படிப்பட்ட ஓர் செயல் பாராட்டினாலும்… மக்கள் செல்வன் கூறுவதோ, “இங்க இருந்து எடுத்தேன், அதான் கொடுத்தேன்”