சென்னை: இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட்டில், 420 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான நிலையில், பொறுப்பை உணர்ந்து பெரிய இன்னிங்ஸை ஆடியிருக்க வேண்டிய ரோகித் ஷர்மா, வெறும் 12 ரன்களில், ஜேக் லீச் பந்தில் பெளல்டு ஆகி வெளி‍யேறினார்.

நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், இந்தியா 39 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்துள்ளது. ஷப்மன் கில் – புஜாரா களத்தில் உள்ளனர்.

இவர், ஆஸ்திரேலிய தொடரில் விளையாடிய 4 இன்னிங்ஸ்களில், ஒன்றில் மட்டுமே சாதாரண அரைசதம் அடித்தார். மற்றபடி, முக்கிய கட்டங்களில் அணியைக் கைவிட்டார். அதேசமயம், இவர் பெரிய எதிர்பார்ப்புடன் அணியில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது, இந்த டெஸ்ட் போட்டியிலும், முதல் இன்னிங்ஸில் ஒற்றை இலக்க ரன்களுக்கு வெளியேறிய நிலையில், 420 என்ற பெரிய டார்க்கெட்‍டை விரட்டும் நிலையில், இப்போதும் 12 ரன்களுக்கு அவுட்டாகியுள்ளார்.

இந்திய அணி, 39 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது. இன்னும் 1 நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில், கைவசம் 9 விக்கெட்டுகள் இருக்கும் சூழலில், வெற்றிக்கு இன்னும் 381 ரன்களை அடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை 90 ஓவர்கள் வீசப்படும்.