இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியடைந்து, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஒயிட்வாஷ் ஆகியுள்ளது தென்னாப்பிரிக்க அணி.

வெற்றிபெறும் என்று மதிப்பிடும் வகையில் ஆடிவந்த அந்த அணியில், சதமடித்த துவக்க வீரர் மார்க்ரம் ஆட்டமிழந்தவுடன், நிலைமை அப்படியே மாறிவிட்டது. மார்க்ரம் ஆட்டமிழந்த சிறிதுநேரத்தில், அரைசதம்(61) அடித்த பவுமாவும் விக்கெட் இழந்தார்.

அதன்பிறகு, வியான் மல்டர் மட்டுமே 20 ரன்கள் அடிக்க, ஜார்ஜ் லிண்டே 4 ரன்கள் மட்டுமே அடித்தார். டி காக், கேசவ் மகராஜ், ரபாடா ஆகிய மூவரும் டக்அவுட் ஆனார்கள். நார்ட்ஜே 2 ரன்களை எடுக்க, 274 ரன்களுக்கு தனது மூச்சை நிறுத்திக்கொண்டது தென்னாப்பிரிக்கா. 95 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி.

பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 5 விக்கெட்டுகளும், ஷஹின் அப்ரிடி 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். நியூசிலாந்தில் அடைந்த தோல்விக்கு பதிலாக, சொந்த மண்ணில் ஆறுதல் வெற்றியைப் ப‍ெற்றுள்ளது பாகிஸ்தான் அணி.