தனுஷ்- மாளவிகா மோகனன் ஜோடியாக நடிக்க கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படத்தின் ஷுட்டிங் ஐதராபாத்தில் கடந்த 30 நாட்களாக தொடர்ந்து நடந்து வந்தது.

பாடல் காட்சியுடன் ஆரம்பித்த படப்பிடிப்பில் மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தனுஷ் நடிக்கும் 43 வது படம் இது, இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

முதல் கட்ட ஷுட்டிங் நேற்று முடிந்த நிலையில் கதாநாயகி மாளவிகா மோகனன், சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த சில புகைப்படங்களை தனது வலைத்தளத்தில் பதிவிட்டு, “தனுஷுடன் நடித்த அனுபவத்தை மறக்க முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.

ஆக்‌ஷன் திரில்லராக உருவாகும் இந்த படத்தில் தனிஷும், மாளவிகாவும் செய்தியாளர்களாக நடிக்கிறார்கள்.

தனுஷ், ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக வெளிநாடு செல்கிறார்.

அந்த படத்தை முடித்து விட்டு, கார்த்திக் நரேன் படப்பிடிப்பில் மீண்டும் மே மாதம் தான் கலந்து கொள்வார்.

அதுவரை தனுஷ் இல்லாத காட்சிகளை படமாக்க இயக்குநர் திட்டமிட்டுள்ளார்.

– பா. பாரதி