மோகன்லால், மீனா நடிக்க ஜீத்து ஜோசப் இயக்கிய ‘திரிஷ்யம்’ கடந்த 2013 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற இந்த படம் தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ‘ரீ-மேக்’ செய்யப்பட்டு நன்றாக ஓடியது.

தமிழில் கமலஹாசன் – கவுதமி ஜோடியாக நடிக்க ‘பாபநாசம்’ என்ற பெயரில் வெளியாகி வசூல் குவித்தது.

இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்குமாறு மோகன்லால் ரசிகர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து ஜீத்து ஜோசப் டைரக்‌ஷனில் ‘திரிஷ்யம் -2’ தயாராகியுள்ளது.

மோகன்லால் – மீனா உள்ளிட்ட அதே கூட்டணி இதிலும் இணைந்துள்ளது.

அமேசான் பிரைம் வீடியோவில் வரும் 19 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தை சிலாகித்து மோகன்லால் செய்தி பதிவிட்டுள்ளார்.

“இந்த படம் சினிமாவில் புதிய மைல் கல்லாக இருக்கும். கெட்ட சக்திக்கும், தீய சக்திக்கும் இடையேயான வெறும் திரில்லர் படம் மட்டுமல்ல. இக்கட்டில் மாட்டிக்கொண்ட தனது குடும்பத்தை என்ன விலை கொடுத்தேனும் காப்பாற்றும் ஜார்ஜ்குட்டியின் பயணம், இது” என மோகன்லால் குறிப்பிட்டுள்ளார்.

– பா. பாரதி