டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,08,38,843 ஆக உயர்ந்து 1,55,114 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 11,673 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,08,38,843 ஆகி உள்ளது.  நேற்று 86 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,55,114 ஆகி உள்ளது.  நேற்று 11,502 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,05,33,076 ஆகி உள்ளது.  தற்போது 1,46,108 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 2,673 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,44,071 ஆகி உள்ளது  நேற்று 30 பேர் உயிர் இழந்து மொத்தம் 51,310 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,622 பேர் குணமடைந்து மொத்தம் 19,55,548 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 35,948 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 6,075 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,68,439 ஆகி உள்ளது.  இதில் நேற்று 19 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,868 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,075 பேர் குணமடைந்து மொத்தம் 8,96,668 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 67,663 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 487 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,42,518 ஆகி உள்ளது  இதில் நேற்று 3 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,236 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 493 பேர் குணமடைந்து மொத்தம் 9,24,304 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,959 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 73 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,88,423 ஆகி உள்ளது  இதுவரை மொத்தம் 7,159 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 82 பேர் குணமடைந்து மொத்தம் 8,80,261 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,003 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 471 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,41,797 ஆகி உள்ளது  இதில் நேற்று ஒருவர் பேர் உயிர் இழந்து மொத்தம் 12,383 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 498 பேர் குணமடைந்து மொத்தம் 8,25,025 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,389 பேர் சிகிச்சையில் உள்ளனர்.