
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெஃப்சி) தலைவராக மீண்டும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தில் 2021-2023ம் ஆண்டுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ஆர்.கே.செல்வமணி தலைவராகவும், அங்கமுத்து சண்முகம் பொதுச்செயலாளராகவும், பொருளாளராக பி.என்.சுவாமிநாதனும் மூன்றாவது முறையாக ஏகமனதாக போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.
இவர்களுடன் துணைத்தலைவர்களாக தினா, ஜே.ஸ்ரீதர், எஸ்.பி.செந்தில்குமார், வி.தினேஷ்குமார், தவசிராஜ் இணைச்செயலாளர்களாக ஏ.சபரிகிரிசன், ஏ.சீனிவாசமூர்த்தி, ஏ.புருஷோத்தமன், ஜி.செந்தில்குமார், கே.ஸ்ரீபிரியா ஆகியோரும் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.
Patrikai.com official YouTube Channel