லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் பொங்கலுக்கு தியேட்டரில் வெளியான படம் மாஸ்டர்.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது. உலகமெங்கும் ரிலீஸாகியுள்ள இந்த படம் வசூல் சாதனை படைத்து வருகிறது.

OTT-யிலும் சில வாரங்களில் வெளியான இந்த படம் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

இந்த படம் 25 நாட்கள் ஆனதை முன்னிட்டு இந்த படத்தின் பின்னணி இசை அடங்கிய OST வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.