பாலிவுட் இயக்குனர்கள் இணைந்து உருவாக்கிய லஸ்ட் ஸ்டோரீஸ் ஆந்தாலஜி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் வரிசையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் இயக்கி உள்ள தெலுங்கு லஸ்ட் ஸ்டோரீஸான பிட்ட கதலு ஆந்தாலஜியின் ட்ரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

சர்வதேச நாடுகளில் ஆந்தாலஜி படங்களை உருவாக்கி ஹிட் அடித்து வந்த நெட்பிளிக்ஸ், இந்தியாவிலும் ஆந்தாலஜி அத்தியாயத்தை தொடங்கி உள்ளது.

தற்போது வெளியாகி உள்ள ட்ரைலரில் நான்கு முன்னணி நடிகைகளான அமலா பால், ஸ்ருதி ஹாசன், ஜகபதி பாபு, ஈஷா ரெப்பா மற்றும் லக்‌ஷ்மி மஞ்சு ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குனர் நாக் அஷ்வின், நந்தினி ரெட்டி, சங்கல்ப் ரெட்டி மற்றும் தேசிய விருது வென்ற தருண் பாஸ்கர் உள்ளிட்ட 4 முன்னணி இயக்குனர்கள் இணைந்து இந்த ஆந்தாலஜியை தெலுங்கு மொழியில் இயக்கி உள்ளனர்.