பி.வாசு இயக்கத்தில் உருவாகும் சந்திரமுகி 2 படத்திலும், பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் லாரன்ஸ்.

இதில் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் படம் தான் ருத்ரன். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிகிறார். தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசனே இந்த படத்தை இயக்கவுள்ளது சமீபத்தில் உறுதியானது.

இந்நிலையில் இந்த படத்தில் சரத்குமார் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காஞ்சனா படத்தில் ராகவா லாரன்ஸ் சரத்குமார் ஆகிய இருவரும் இணைந்து நடித்த நிலையில் தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு இருவரும் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.