எச்.வினோத், இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. இதில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார் அஜித். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் தாயின் அன்பை உணர்த்தும் பாடல் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் யுவன். இது தவிர படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு கடந்த ஒரு வருடங்களாக
அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
ஒரு கட்டத்தில் எல்லை மீறி, பிரபலங்கள் சிலருடைய ட்விட்டர் பக்கத்திலும் போய் “வலிமை அப்டேட்” என்று பதிவிடத் தொடங்கினார்கள். உதாரணமாக, இசையமைப்பாளர் சாம் சி.எஸ் மும்பையில் இருப்பதாகப் புகைப்படத்துடன் ட்வீட் செய்தார். அதற்கு “மும்பையில்தான் போனி கபூர் வீடு இருக்கிறது. அவரிடம் சென்று வலிமை அப்டேட் கேட்டுச் சொல்லுங்கள்” என்று பதில் அளித்தார்கள்.
இதனால், நேற்று (பிப்ரவரி 3) இரவு #ValimaiFlLeaked என்று ட்ரெண்ட் செய்யத் தொடங்கினார்கள். படக்குழுவினரோ ஃபர்ஸ்ட் லுக் லீக்காகி விட்டதா என்று அதிர்ச்சி அடைந்தார்கள். லீக்காகி விட்டது என்ற தகவல் வெளியானால், படக்குழுவினரோ அதிகாரபூர்வமாக வெளியிட்டுவிடுவது வாடிக்கை. ஆகையால் இப்படியொரு முடிவை எடுத்து ட்ரெண்ட் செய்தார்கள். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டானதுதான் வேடிக்கையாக இருந்தது.
இந்நிலையில் அஜித்தை படப்பிடிப்பு தளத்தில் நேரடியாக சந்தித்த ரசிகர் ஒருவர் ‘வலிமை’ அப்டேட் பற்றி கேட்டுள்ளார். இதுகுறித்து அஜித்தை சந்தித்த புகைப்படத்துடன் ட்விட்டரில் எழுதியிருக்கும் அந்த நபர், “நேற்று மாலை வலிமை செட்டில் தல அஜித்தை சந்திதேன். 10 நிமிடம் பேசினோம். அப்போது வலிமை அப்டேட் குறித்து கேட்டதற்கு பிப்ரவரி மாதம் அனைத்து தகவல்களும் கிடைக்கும் என்றார். தனக்காக சில நிமிடங்கள் ஒதுக்கியதற்கு நன்றி” என்று கூறியுள்ளார்.
Last evening met #ThalaAjith sir at #Valimai️ set's and 10mins we enjoyed with him and when we asked him #ValimaiUpdate he told by February end will get All updates. Really humbled sir for giving us appointment. pic.twitter.com/1R9GKgJBS2
— Harish Kumar (@apparalaHarish) February 4, 2021