லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாய் வெளியான படம் மாஸ்டர். இந்தப் படத்தின் நாயகி மாளவிகா மோகனனின் காட்சிகளை வைத்து தொடர்ச்சியாக சமூக வலைத்தளத்தில் மீம்ஸ் வெளியிடப்பட்டு வருகின்றன.

இணையத்தில் வைரலாகும் தனது மீம்ஸ் தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் மாளவிகா மோகனன் : என்னைப் பற்றிய மீம்ஸ் திருவிழாவை நான் சற்று தாமதமாகத்தான் பார்த்திருக்கிறேன். இது மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது மக்களே. என்னை நன்றாகச் சிரிக்க வைத்த, எனக்குப் பிடித்தமான சில மீம்ஸை நான் பகிர்கிறேன்.

அந்த டூத்பேஸ்ட் மீமைப் பார்த்து நான் விழுந்து விழுந்து சிரித்தேன். உங்களைப் பார்த்து உங்களால் சிரிக்க முடியாவிட்டால் வாழ்க்கை மிகவும் போர் அடிக்கும் இல்லையா? என்று மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.