
தடையறத் தாக்க படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகியவர் ரகுல் ப்ரீத் சிங்.
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பிற மொழிப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
சில மாதங்களுக்கு முன் இவர் போதைப் பொருள் வழக்கில் சிக்கினார். அவருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர்.
ரகுல் பிரீத் இந்தியில் அர்ஜுன் கபூர் ஜோடியாக சர்தார் அண்ட் கிராண்ட்சன் என்ற படத்தில் நடிக்கிறார். அடுத்து பிரபல பாலிவுட் ஹீரோ அஜய் தேவ்கன் நடிக்கும் மே டே என்ற இந்திப் படத்தில் நடிக்கிறார்.
இதையடுத்து அஜய்தேவ் ஜோடியாக தேங்க் காட் என்ற படத்திலும் சமீபத்தில் ஒப்பந்தம் ஆனார். இதன் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கு முன், அட்டாக் என்ற படத்தில் ஜான் அபிரகாம் ஜோடியாக நடித்து வருகிரார். இப்போது மற்றொரு பாலிவுட் படத்திலும் அவர் நடிக்கிறார். டாக்டர் ஜி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், ஆயுஷ் குரானா ஹீரோவாக நடிக்கிறார்.
[youtube-feed feed=1]