இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி .

.சுல்தான் படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.கீதா கோவிந்தம்,டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா இந்த படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைக்கின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் டீசரை வெளியிட்டிருக்கும் படக்குழு ஏப்ரல் 2-ம் தேதி திரையரங்குகளில் படம் ரிலீசாகும் எனவும் தெரிவித்துள்ளது. ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த டீசரில் மகாபாரதத்தை ஒருமுறை போர் இல்லாமல் படித்துப் பாருங்க சார் என்கிறார் கார்த்தி.