‘என் ராசாவின் மனசிலே’ 2-ம் பாகத்தின் மூலம் ராஜ்கிரணின் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது இயக்குநராக அறிமுகமாகிறார்.
இது தொடர்பாக ராஜ்கிரண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் :
“இறை அருளால், இன்று, என் மகனார் திப்பு சுல்தான் நைனார் முஹம்மதுவின் இருபதாவது பிறந்த நாள். ‘என் ராசாவின் மனசிலே’ 2-ம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டு, திரைக்கதையை எழுதிக் கொண்டிருக்கிறார். அவரே படத்தை இயக்கவும் உள்ளார். அவர் மிகப்பெரும் வெற்றிப்பட இயக்குநராக, உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறேன்”.
இவ்வாறு ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.
https://www.facebook.com/rajkiran.raj.370/posts/2850180915198211