
மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘இரும்புத்திரை’.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது இந்தி ரீமேக்கில் முன்னணி நாயகன் ஒருவர் நடிப்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், இதில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிக்க விஷாலிடம் பேசியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இரும்புத்திரை’ படம் தமிழில் உருவானபோது, முதலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில்தான் விஷால் நடிக்க விரும்பினார். பின்பு நாயகனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel