
‘கே.ஜி.எஃப்’ படத்தைத் தொடர்ந்து ‘கே.ஜி.எஃப் 2’ தயாரிப்பில் உள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஒரே சமயத்தில் அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘கே.ஜி.எஃப் 2’ படத்தின் டீஸருக்கு இணையத்தில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும், யூடியூப் தளத்தில் பல்வேறு சாதனைகளையும் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய ‘கே.ஜி.எஃப் 2’ படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது.
https://twitter.com/prashanth_neel/status/1355139129101570049
Patrikai.com official YouTube Channel