சென்னை:
கூட்டணி விஷயத்தில் விஜயகாந்த் முடிவை ஏற்போம் என்று தேமுதிக நிர்வாகிகள் உறுதி அளித்துள்ளனர்.

தேமுதிக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுக தலைமை அலுவலத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளிட்ட பலர் பங்கேற்ற இந்த கூட்டத்தில், 300-க்கு மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் எதிர்வரும் தேர்தல் கூட்டணி குறித்தும், தேர்தல் பணிகளை குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும், கூட்டணி விஷயத்தில் விஜயகாந்த் முடிவை ஏற்போம் என்று தேமுதிக நிர்வாகிகள் உறுதி மொழி ஏற்றதாகவும் தெரிய வந்துள்ளது.
Patrikai.com official YouTube Channel