அமைதிப்படை-2′, ‘கங்காரு’, ‘மிக மிக அவசரம்’ படங்களைத் தயாரித்தவர் சுரேஷ் காமாட்சி. இதில் ‘மிக மிக அவசரம்’ படத்தைத் தயாரித்தது மட்டுமன்றி, இயக்கவும் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் ‘மாநாடு’ படத்தைப் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் புதிய படமொன்றைத் தயாரித்து, இயக்க முடிவு செய்துள்ளார் சுரேஷ் காமாட்சி.

பிரபல எழுத்தாளர் ம.காமுத்துரை எழுதிய ‘முற்றாத இரவொன்றில்’ என்கிற நாவலைத் தழுவி இந்தப் படம் உருவாகவுள்ளது.

இதற்காக நாவலைப் படமாக்கும் உரிமையை ம.காமுத்துரையிடம் இருந்து முறைப்படி பெற்றுள்ளார் சுரேஷ் காமாட்சி.