மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கே.எஸ்.ரவிக்குமார் வாங்கியிருந்தார்.
இத்திரைப்படம் தமிழில் கூகுள் குட்டப்பன் எனும் டைட்டிலுடன் உருவாகிறது. கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவியாளர்களாக பணியாற்றிய சபரி மற்றும் சரவணன் இயக்கும் இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். மதன் கார்க்கி பாடல்கள் எழுத ப்ரவீன் ஆண்டணி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
இத்திரைப்படத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் லாஸ்லியா இணைந்து நடிக்கின்றனர். இவர்களுடம் நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தர்ஷனுக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கிறார். கேரக்டரில் லாஸ்லியா நடிக்கிறார். இன்று இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
அப்போது பேசிய கே.எஸ்.ரவிக்குமாரிடம் மீண்டும் எப்போது ரஜினியுடன் படம் பண்ணுவீர்கள் என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த கே.எஸ்.ரவிக்குமார், “மாதம் ஒருமுறை ரஜினியுடன் தொடர்ச்சியாக நட்பு ரீதியாக பேசி வருகிறேன். சமீபத்தில் ‘ராணா’ படத்தின் கதையை மீண்டும் ஒரு முறை சொல்லுங்கள் என்று கேட்டார். நானும் சென்று சொல்லிவிட்டு வந்தேன். மிகவும் நல்ல கதை என்று பாராட்டிவிட்டு இப்போது இருக்கும் உடல்நிலையில் என்னால் அதை செய்ய முடியாது. விரைவில் செய்யலாம் என்று ரஜினி சொல்லி இருக்கிறார்” என்றார் கே.எஸ்.ரவிக்குமார்.
#Rajinikanth | “Raana படத்துல நடிக்க இன்னும் கொஞ்சம் வலு வேணும். ரெடியாய்டு வர்றேன்” என ரஜினிகாந்த் என்னிடம் கூறினார் : #KSRavikumar பேச்சு. pic.twitter.com/nGWLOjBjRE
— Ponmanaselvan S (@IamSellvah) January 28, 2021