நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா மனமொத்த தம்பதிகளாக வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர்.
3 வருடக் காதல் 2012ம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. திருமணத்து பிறகும் சினேகா தேர்வு செய்து படங்களில் நடித்து வருகிறார். இவர்களுக்கு 2 பிள்ளைகள். 2015ம் ஆண்டு விஹான் என்ற குழந்தை பெற்ற சினேகா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆதியந்தா என்ற அழகான மகளைப் பெற்றெடுத்தார்.
குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆனதையடுத்து குழந்தையின் முதல் பிறந்தநாளைச் சினேகா நேற்று கொண்டாடினார். அலங்கரிக்கப்பட்ட அறையில் பெரிய கேக் வாங்கி வைத்து குழந்தை கேக் வெட்ட வைத்து மகிழ்ந்தார். இதில் சினேகாவின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.