டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாளை தலைவர் டெல்லியில் டிராக்டர்கள் டிராக்டர் பேணி நடத்துகின்றனர். இதையொட்டி, பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் சாரை சாரையாக தங்களது டிராக்டர்களுடன் டெல்லியை நோக்கி படையெடுத்துச் செல்கின்றனர்.
விவசாயிகளின் போராட்டத்தை தடுக்கும் வகையில், பாஜக ஆளும் மாநிலங்களில் டிராக்டர்களுக்கு டீசல் தர பெட்ரோல் பங்கு உரிமையாளர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் நாளை குடியரசு தின விழா ஊர்வலம், ராணுவ அணிவகுப்பு நடைபெற உள்ளது. அன்றைய தினம், விவசாயிகளும், வேளாண் சட்டங்களுக்கு எதிரான டிராக்டர்கள் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த பேரணியில் சுமார் 1 லட்சம் டிராக்டர்களுடன் விவசாயிகள் கலந்துகொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பேரணிக்கு அனுமதி மறுத்து வந்த மத்தியஅரசு, தற்போது, அனுமதி வழங்கி உள்ளது. டிராக்டர் பேரணிக்கான பாதை இன்று இறுதி செய்யப்பட உள்ளது.
இதன் காரணமாக, அண்ட மாநிலங்களில் இருந்து டெல்லியை நோக்கி விவசாயிகள் தங்களது டிராக்டர்கள், கார்களில் பயணித்து வருகின்றனர். ஆனால், அவர்களை தடுக்கும் வகையில், பாஜக ஆளும் உத்தரபிரதேசம், அரியான மாநிலங்களில் விவசாயிகளின் டிராக்டர்களுக்கும், கார்களுக்கும் பெட்ரோல், டீசல் வழங்க மறுப்பதாகப் புகார் எழுந்துள்ளது. மாநில அரசின் மிரட்டலின் காரணமாக, பெட்ரோல் பங்குகளில் டீசல் வழங்கப்படுதாக விவசாயிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
டெல்லியில் சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடத்தப்படும் இந்த பேரணியில் சுமார் 1 லட்சம் டிராக்டர்களுடன் விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். இதற்காக பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து டிராக்டர்கள் டெல்லி நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. மேலும் பல மாநிலங்களில், அந்தந்த பகுதிகளிலேயே டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் போராட்டம் காரணமாக அரியானா, டெல்லி எல்லைகளில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.