
ஆஸ்திரேலியா – இந்தியா இடையே நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில், சில சிறிய சுவாரஸ்யமான அம்சங்களை கவனிக்க வேண்டியுள்ளது.
மொத்தம் 4 போட்டிகள் (8 இன்னிங்ஸ்கள்) கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், இந்திய அணி, மொத்தம் 4 முறை 300 ரன்களைத் தாண்டியுள்ளது. இரண்டாவது(மெல்போர்ன் டெஸ்ட்) டெஸ்ட்டில் 1 முறை, சிட்னி டெஸ்ட்டில் 1 முறை மற்றும் பிரிஸ்பேன் டெஸ்ட்டில் 2 முறைகள்.
ஆனால், ஆஸ்திரேலிய அணி 3 முறை மட்டுமே 300 ரன்களைத் தாண்டியுள்ளது. சிட்னி டெஸ்ட்டில் 2 முறை மற்றும் பிரிஸ்பேன் டெஸ்ட்டில் 1 முறை.
பந்துவீச்சைப் பொறுத்தவரை, இந்திய பெளலர்கள் ஆஸ்திரேலியாவை மொத்தம் 6 முறை முழுவதுமாக ஆட்டமிழக்கச் செய்துள்ளார்கள்.
அடிலெய்டு 1 முறை, மெல்போர்ன் 2 முறை, சிட்னி 1 முறை மற்றும் பிரிஸ்பேன் 2 முறை.
ஆனால், ஆஸ்திரேலிய பெளலர்களோ, இந்திய அணியை, 5 முறை மட்டுமே ஆல்அவுட் செய்துள்ளனர். அடிலெய்டில் 2 முறை, மெல்போர்னில் 1 முறை, சிட்னியில் 1 முறை மற்றும் பிரிஸ்பேனில் 1 முறை.