தில்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், மஞ்சிமா மோகன், ராஷி கண்ணா, கருணாகரன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘துக்ளக் தர்பார்’.
நேற்று (ஜனவரி 11) ‘துக்ளக் தர்பார்’ படத்தின் டீஸரை வெளியிட்டது படக்குழு.
டீசரில் பார்த்திபனுக்கு ராசிமான் என பெயரிடப்பட்டிருப்பதும் அவரது கட்சி சார்பாக ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரில் தெரிய வருகிறது. அவரது கட்சிக்கு சிவப்பு மஞ்சள் சிவப்பு என நாம் தமிழர் கட்சியின் பிரதான வண்ணமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் போஸ்டரில் ‘புலி இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்’ என்றும் எழுதப்பட்டிருக்கிறது.
டீசரின் இறுதிக்காட்சியில் “எப்டினாலும் நீங்க என்னை சும்மா விடப்போறதில்ல. அதனால நானும் உங்கள சும்மா விடுறதா இல்ல. வாங்களேன். நேரடியாவே மோதிப் பாப்போம்” என்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப்படமான ‘800’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று சீமான் தீவிரமாக குரல் கொடுத்ததால் அவரை எதிர்க்கும் வேலையில் விஜய் சேதுபதி இறங்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது .
இம்மாதிரியான காட்சிகளை எடுத்த இயக்குநர் மற்றும் இதில் நடித்த நடிகர்களை வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்தக் காட்சிகளோடு இப்படம் திரைக்கு வருமாயின் உலகம் முழுவதும் ஒரு காட்சிகூட திரையரங்குகளில் ஓடாது என்பதை எச்சரிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
இழவு வீட்டில் இருக்கும் எங்களிடம் வந்து வம்பிழுக்கும் வேலையை விடுங்கள். இல்லையேல் இந்தக் கலைத்துறையிலிருந்து வெகு விரைவில் அப்புறப்படுத்தப்படுவீர்கள்” என நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது.